பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு!

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு தொடர்பாக...

warrent

வாரண்ட் இணையத் தொடர். - படம்: எக்ஸ்

Published On :

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ’விலங்கு’ தொடர் குழுவின் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய இணையத் தொடர் ’வாரண்ட்’.

மேலும் இந்தத் தொடரில் கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Story image

ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இந்தத் தொடரை, சிவன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் தயாரித்துள்ளார்.

குற்ற புலனாய்வு விசாரணை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் மே 22 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’விலங்கு’ இணையத் தொடர் குழு, மீண்டும் ’வாரண்ட்’ என்ற புதிய இணையத் தொடரை எடுத்துள்ளதால், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Summary

An announcement has been released regarding the new web series from the team behind the popular web series Vilangu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.