குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற இணையத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த இணையத் தொடருக்கு மணிகண்டன் ராமமூர்த்தி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் 4 சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி, நகைச்சுவை கலந்து இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
போலீஸ் போலீஸ் மற்றும் வேர மாரி ஆஃபிஸ் உள்ளிட்ட இணையத் தொடர்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிதம்பரம் மணிவண்ணன் இந்தத் தொடரை இயக்குகிறார்.
இவர், ஆன்மீகத் தொகுப்புப் படமான 'அனந்தா' படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் மே 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத் தொடரின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Summary
The web series 'Brothers and Sisters' has been produced with the aim of appealing to family audiences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் படப்பிடிப்பு தொடக்கம்! வெளியீடு எப்போது?

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

