அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

தாய் கிழவி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தாய் கிழவி படத்தின் ஓடிடி வெளியீட்டு தொடர்பாக...

thai kizhavi

தாய் கிழவி போஸ்டர் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்

Published On :

நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய் கிழவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம்,  கிராமத்து பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப் படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

பல திரையரங்கங்களில் கூடுதல் காட்சிகளைத் தாய் கிழவி படத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், உலகளவில் தாய் கிழவி திரைப்படம் 25 நாள்களில் ரூ. 75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Thai Kizhavi, starring actress Radhika Sarathkumar, has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.