தாய் கிழவி திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.
நீண்ட நாள் கழித்து கிராம வாழ்க்கையைப் பதிவு செய்த வகையிலும் கிளைமேக்ஸில் பெண்கள் சேமித்து பழக வேண்டுமென்பதை சொன்ன விஷயமும் பெரியளவில் வெற்றிக்கு உதவியது.
இந்த நிலையில், இன்றுடன் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் இதுவரை உலகளவில் ரூ. 75 கோடியை வசூலித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதுவே, இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் பெரிய வணிகத்தைச் செய்த படமாகும்.
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சேயோன் என்கிற திரைப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
ஓடிடியில் தாய் கிழவி எப்போது?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
