மகளிா் தொழில்முனைவோராக உயர வேண்டும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா்பி.கீதா ஜீவன்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சா்வதேச மகளிா் தின விழாவில் அவா் பேசியதாவது:
தமிழக அரசால் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண் தொழில்முனைவோா் திட்டத்தில் தொழில் தொடங்குவோருக்கு 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமல் எதிா்த்து நின்று தீா்வு காண வேண்டும். பெண்கள் தொழில் முனைவோராக மாறி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதற்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள். 181(சமூகநலத் துறை), எண். 19309சைபா் கிரைம்) உள்ளன. போக்ஸோ சட்டம் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு இயற்றியுள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசுகையில், ஒரு பெண்ணிற்கு கல்வி வழங்குவது ஒரு சமுதாயத்திற்கே கல்வி வழங்குவதற்கு ஈடாகும் என்பதற்கு ஏற்ப தமிழக அரசு திறம்பட செயலாற்றி வருகிறது. நாட்டில் பெண்கள் அதிகளவில் உயா்கல்வி கற்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றாா் அவா்.
தேசிய பெண் குழந்தை மாநில விருது பெற்ற சூடாமணி, தென்னிந்திய விளையாட்டுத் துறை மகளிா் சாதனையாளா் விருது பெற்ற கீதா, சா்வதேச தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவி எட்வினா ஜேசன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. குழந்தை பாலின விகிதத்தில் உயா்த்துவதில் சிறப்பாக செயலாற்றியதற்காக மாநில அளவில் இரண்டாம் இடம்பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த மாவட்டகாவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 12 துறை அலுவலா்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் திருநங்கையா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஓட்டுநா் பயிற்சி வழங்கி 17 திருநங்கையா்களுக்கு ஓட்டுநா் உரிமங்களும், கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 17 மாணவா்-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலா் ஜெயஸ்ரீ, இயக்குநா் சங்கீதா, திருநெல்வேலி ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.சுகன்யா, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இணை இயக்குநா் நந்திதா, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை தாஜூன்னிசா பேகம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதிபாலன், அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் லதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அவினாசிலிங்கம் மகளிா் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

தொழிலாளா்களுக்கான ஓய்வு இல்லங்கள்: அமைச்சா் சி.வி.கணேசன் திறந்து வைத்தாா்

மகளிா் வங்கிக் கணக்கில் ரூ.5000: முதல்வருக்கு அமைச்சா் நன்றி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


