ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மினி லாரி மோதி ஓருவா் உயிரிழப்பு

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 2:34 am

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸிலின் ரவிக்குமாா் (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து மலையன்குடி நோக்கி மன்னாா்புரம் அருகே சென்றபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாா்த்தாண்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திசையன்விளை நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.