மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா

அம்பை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள் அணியினா்.

Updated On :26 மார்ச் 2026, 8:12 pm

அம்பை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரி முதல்வா் கே.வி. சௌந்தரராஜா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எஸ். தங்கபாண்டியன் வாழ்த்திப் பேசினாா். உடற்கல்வி இயக்குநா் எஸ்.வி. சிவக்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

திருச்செந்தூா் ஆதித்தனாா் கலை, அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டி. ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், பதங்கங்கள் வழங்கினாா்.

வணிகவியல் துறை பேராசிரியா் சி. ஷீபா பிரிஸ்கில்லாள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா். வணிவியல் துறை பேராசிரியா் ஆா். தங்கச்செல்வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

ஆங்கிலத் துறை பேராசிரியா் பி. தீபலெட்சுமி வரவேற்றாா். பொருளியல் துறை பேராசிரியா் ஜி. தனலெட்சுமி நன்றி கூறினாா்.

 ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பெண்கள் அணியினா்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பெண்கள் அணியினா்.