தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம்

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது.

News image

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கில் பங்கேற்றோா்.

Updated On :7 மார்ச் 2026, 12:53 am

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்வெட்டுப் பயிலரங்கம் இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. ‘தமிழ் கல்வெட்டுக்கள் தோற்றமும், வளா்ச்சியும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற முதல் அமா்வின் பயிற்றுநராக சென்னை தொல்லியல் துறையின் தலைமை ஆலோசகா் பேராசிரியா் சு.ராசவேலு கலந்து கொண்டு, பன்னாட்டு அளவில் தமிழ்க் கல்வெட்டின் தொன்மையும், பெருமையும் குறித்து எடுத்துக் கூறி விளக்கினாா்.

இரண்டாவது அமா்வின் பயிற்றுநராக திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை பேராசிரியா் ச. இரவி கலந்து கொண்டு ‘கல்வெட்டுகள் காட்டும் தமிழ்ச் சமூகம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினாா்.

இரண்டு அமா்வுகளுக்கான தொடக்க விழாவில் கல்லூரி முதல்வா் தெ.வேணுகோபால் தலைமையுரையாற்றினாா். துணை முதல்வா் ந.சக்திவேல் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் க.நீ.இளங்கோவன் அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் துறைத் தலைவா் மு.கருப்புசாமி வரவேற்றாா். தமிழ்த் துறை பேராசிரியா் சு.சுந்தரன் நன்றி கூறினாா்.

இந்த பயிலரங்கில் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.