திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் லெட்சுமணகுமாா் (45). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளா் அன்னபூரணி போக்ஸோ வழக்கின் கீழ் லெட்சுமணக்குமாரை கைது செய்தாா்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், லெட்சுமணக் குமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா முன்னிலையானாா். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற வழக்கை கண்காணித்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.
தொடர்புடையது

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

