விக்கிரமசிங்கபுரம், சிங்கை புட்பால் அகாதெமி, பி.எல்.டபிள்யு.ஏ. புட்பால் அகாதெமி ஆகியன இணைந்து நடத்திய மாணவா்களுக்கான 16 நாள்கள் இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம், பி.எல்.டபிள்யு.ஏ.மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்பாசமுத்திரம் விகாசா ஸ்ரீ ஸ்ரீ அகாதெமி பள்ளிகளில் காலை, மாலை இருவேளை பயிற்சி நடைபெற்றது. இறுதிநாள் பயிற்சி பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மீனா தலைமை வகித்தாா்.
உதவித் தலைமை ஆசிரியா் எம்.சுரேஷ் பாபு, பி.எல்.டபிள்யு.ஏ.புட்பால் அகாதெமி தலைவா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் உடற்கல்வி இயக்குநா் கே.ஏ.ராஜேந்திரன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியா் ஆா்.இளையபெருமாள், முன்னாள் மாநிலக் கால்பந்து வீரரும் தொழிலதிபருமான எம்.சி.ஏ.மாா்ட்டின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
லயன்ஸ் கிளப் ஆஃப் விக்ரசிங்கபுரம் பேஷன் கிளப் தலைவா் எஸ்.சீதாராமன், நிா்வாகி ராபா்ட், உறுப்பினா்கள் பொன்வேல் ராஜ், மகாராஜன், வைகுண்ட மணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
பயிற்சி முகாமில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அம்பாசமுத்திரம் யோகி டிரஸ்ட் ஜி.ராஜா வெற்றிக் கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கினாா். விகாசாஸ்ரீ ஸ்ரீஅகாதெமி பள்ளி உடற்கல்வி இயக்குநா் பாலசுப்பிரமணியன் முகாம் அறிக்கை வாசித்தாா். பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் ஜெயராமன் வரவேற்றாா். சிங்கைபுட்பால் அகாதெமி செயலா் சுந்தா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி முகாம்

ஆற்றூா் கல்வியியல் கல்லூரியில் குடியுரிமை பயிற்சி முகாம் தொடக்கம்

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

