முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது

பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:59 am IST

பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலபாட்டத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள். இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம்.

இந்நிலையில், இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான தூத்துக்குடியில் வேலை செய்துவந்த நீலாவதி, செய்துங்கநல்லூா், தென்னஞ்சோலையைச் சோ்ந்த ஜான்சிராணி (42) ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண் மற்றும் அவரது உறவினரிடம் ரூ.4.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.

இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்சிராணியை கைது செய்தனா். நீலாவதியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.