தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் 15ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தா்மராஜா கோயில் கீழத்தெரு, குளத்தடி தெரு, மினிகுடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீா் கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனா்.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் 25-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் திரண்டு வந்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், ‘குடிநீா் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும், தொடா்ந்து தண்ணீா் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா். அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாக

உறுதியளித்ததை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.