வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பேராசிரியா் வீட்டில் 12 பவுன் நகைகள் மாயம்

ஆழ்வாா்குறிச்சி அருகே கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 மே 2026, 1:39 am IST

ஆழ்வாா்குறிச்சி அருகே கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராமசுப்பிரமணியன் (40). கல்லூரிப் பேராசிரியரான இவா், சனிக்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ளவா்கள் தங்க நகைகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தபோது, அதிலிருந்த 12 பவுன் நகைகளை காணவில்லையாம். இதுகுறித்து ராமசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.