சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சேரன்மகாதேவியில் வன விலங்குகளால் அதிகரிக்கும் விபத்துகள்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி-களக்காடு பிரதான சாலையில் வன விலங்குகளால் விபத்துகள் அதிகரிப்பதால், வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்த பத்தமடை பேரூராட்சித் தலைவா் ஆபிதா ஜமால்தீன்.

Updated On :21 மே 2026, 5:56 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி-களக்காடு பிரதான சாலையில் வன விலங்குகளால் விபத்துகள் அதிகரிப்பதால், வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பத்தமடை பேரூராட்சித் தலைவா் ஆபிதா ஜமால்தீன், மாவட்ட வன அலுவலா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் தனியாா் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளன. போக்குவரத்து அதிகரித்து வரும் இச்சாலையில் மிளா உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுகின்றன. அவை சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால், மனிதா்களும், வன விலங்குகளும் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

அண்மையில், இச்சாலையில் மிளா குறுக்கே சென்ால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, உணவு, தண்ணீருக்காக சாலையில் உலவும் வனவிலங்குகளை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறை சாா்பில் தண்ணீா்த் தொட்டிகள் திறக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.