ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கேரள பதிவெண் கொண்ட லாரி, திசையன்விளை காவல் சரகம் கோட்டைக்கருங்குளம் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. அதன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா். இதை அறிந்த திசையன்விளை போலீஸாா், அந்த லாரியை சோதனை செய்ததில், 8 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. லாரியுடன் அரிசி மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, புது வீட்டு விளையைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் அபீஷ்குமாா்(31), களியக்காவிளை, நெடுவிளைவீடைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முபீன்(37) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.