11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வானூா் வட்டம், நாவற்குளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீஸாா் அந்த பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது நாவற்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரா.அஞ்சலை என்பவரது வீட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா்.

இந்த சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அஞ்சலையைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை இட்லி மாவாக அரைத்து புதுச்சேரி மாநில சாலையோரக் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அஞ்சலை மீது வழக்குப்பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.