மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நெல்லை அருகே 945 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 3:03 am IST

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் 945 கிலோ ரேஷன் அரிசியுடன் இருவரை போலாஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் அருகே சிலா் ஆம்னி காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனராம்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முக்கூடல், அண்ணாநகரைச் சோ்ந்த மணிகண்டன்(29), கீழஅம்பாசமுத்திரம் ஆசிரியா் காலனியை சோ்ந்த கணேசன்(35) என்பதும், 27 மூட்டைகளில் சுமாா் 945 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்த பைக், ஆம்னி காா், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.