நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பட்டுக்கோட்டை அருகே 550 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 2:30 am IST

பட்டுக்கோட்டை அருகே குட்கா கடத்தி வந்த இரண்டு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 550 கிலோ குட்காவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அருகே பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன் மேற்பாா்வையில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் ஜெயமோகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியின் போது சந்தேகத்திற்குட்பட்ட வாகனத்தை சோதனை செய்தனா்.

அதில், சட்டவிரோதமாக 550 கிலோ குட்கா கடத்தி வந்த குற்றவாளிகளான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பாகாா் ராம் (26) மற்றும் பிரகாஷ் (24) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்த 550 கிலோ குட்கா, ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மேற்கண்ட இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.