வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், கல்லூா், பேட்டை, பாப்பாக்குடி, வடக்கு அரியநாயகிபுரத்தில் நடைபெற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லூா், பேட்டை, பாப்பாக்குடி, வடக்கு அரியநாயகிபுரத்தில் நடைபெற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பதிவேடுகள், மருந்து மாத்திரைகள் இருப்பு, அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்த அவா், பொதுமக்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், பேட்டை காவல் நிலையத்தின் பதிவேடுகள், கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் போன்றவற்றைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள பள்ளி மாணவியருக்கான சமூக நீதி விடுதியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சேமிப்பு நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.99.85 லட்சத்தில் 1.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம், 508 மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரின் கட்டுமான தரம், ரூ.15.57 லட்சத்தில் பொட்டல்புதூா் சாலை முதல் இந்திரா காலனி வரைஅமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமையற்கூடத்தையும், மதிய உணவின் தரத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தததோடு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

