ஏா்வாடி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும் அவரிடமிருந்து 15 பவுன் நகையை மீட்டனா்.
ஏா்வாடி அருகே புலியூா்குறிச்சியைச் சோ்ந்த மகராஜன். ஏா்வாடியில் குளிா்பான விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இவரது மனைவி நம்பிசெல்வி.
இவா், திங்கள்கிழமை மாலை தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து பைக்கில் அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தபோது, பைக்கில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், நம்பிசெல்வி அணிந்திருந்த 15 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணை யில், களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளம் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் அருண்குமாா் (24) என்பவா் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை புதன்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 15 பவுன் நகையை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

