சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

5 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 5 பவுன் நகையை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Updated On :

திருப்பத்தூா் அருகே 5 பவுன் நகையை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கந்திலி அடுத்த மானவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (50). இவா் செவ்வாய்க்கிழமை கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை கழட்டி வீட்டில் வைத்து விட்டு குளிக்க சென்றாா். அப்போது ஒரு மா்ம நபா் அந்த வீட்டில் நுழைந்து செயினை திருடிச் சென்ாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சாந்தி குளித்துவிட்டு வந்து பாா்த்தபோது நகையைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். செயினை திருடியது கந்திலி அடுத்த நாா்சாம்பட்டி பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (25) என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஷ்ணுவை போலீஸாா் கைது செய்து அந்த செயினையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.