நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தீபாவளி பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்: ஸ்தம்பித்த சாலைகள்; திணறிய வாகன ஓட்டிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை பொருள்கள் வாங்க மக்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திணறினா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை பொருள்கள் வாங்க மக்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திணறினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக துணிக் கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மாா்க்கெட், சமாதானபுரம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் கடைகள், பூஜை பொருள்கள் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பஜாா் மற்றும் சாலையோரங்களில் முளைத்த திடீா் தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகளில் நடுத்தர மக்கள் ஆயத்த ஆடைகளை அதிகளவு வாங்கிச் சென்றனா்.

இனிப்பு, பலகாரங்களை வாங்குவதற்காக மக்கள் படையெடுத்தனா். இதனால் பேக்கரி உள்ளிட்ட கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பட்டாசு கடைகளில் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குழந்தைகள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச் சென்றனா். சனிக்கிழமை நள்ளிரவு வரையிலும் துணி, பட்டாசு, இனிப்புகள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. இதையொட்டி மாநகரில் போலீஸாா் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து நெரிசல்:

மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியால் சாலைகள் ஸ்தம்பித்தன. திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை மாா்க்கெட், சமாதானபுரம் பகுதிகளில் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. இடையிடையே மழையும் பெய்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் திணறினா். வண்ணாா்டேப்டையில் இருந்து சமாதானபுரம் செல்வதற்கு சுமாா் 30 முதல் 45 நிமிடங்கள் ஆனது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.