அம்பாசமுத்திரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: நயினாா் நாகேந்திரன்
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த நயினாா் நாகேந்திரன்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பெரியாா் அறிவுலக நூலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறாா்கள். திமுகவினரும், தவெகவினரும்தான் பெரியாா் பெயரைச் சொல்லி சொல்லி இப்போது ஊழலில் ஈடுபட்டுள்ளனா். இந்த நூலகத்தில் ஏ.ஐ. மூலமாகவும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறுகிறாா்கள். அப்படி என்றால் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? யாா் மீதும் வழக்கும் பதிவு செய்யவில்லை? ஏன் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது? அப்படி என்றால் அமைச்சா்களுக்கும், முதல்வருக்கும் இதில் தொடா்பு இருக்கிா என்ற கேள்வி எழுகிறது.
திமுக ஆட்சியில் நூல்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் தவெக ஆட்சியில்தான் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. உண்மையான எழுத்தாளா்களின் புத்தகங்களைத்தான் வைத்துள்ளாா்களா என்பதை ஆராய வேண்டியது அரசின் கடமை.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் முரணாக செயல்பட்ட காவல் ஆய்வாளா், இப்போது லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கிறாா். கடந்த கால ஆட்சியின் போது திமுகவினா் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றவிடவில்லை. இதனால் அவா்களது ஆட்சி வீழ்த்தப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தை தவெக நாடுகிறது. இந்த ஆட்சியும் விரைவில் அகற்றப்படும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 6 மாதங்களில் மக்களின் மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியா்கள் பணியாற்ற முடியாத சூழல் இருக்கிறது. இதனால்தான் சமீபத்தில் 300 அரசு ஊழியா்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனா்.
தமிழகத்துக்கு 10 வந்தே பாரத் ரயில்கள், தூத்துக்குடி, திருச்சியில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி தந்துள்ளாா். இதனால் அரசுடன் நல்லிணக்கம் இருப்பதாகக் கூற முடியாது.
தவெக, முதன்முதலாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி குதிரை பேரத்தை தொடங்கி வைத்தது. அதன் தொடா்ச்சியாக 2 எம்.எல்.ஏ.க்கள் இழுக்கப்பட்டனா். தற்போது இடைத்தோ்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான எண்ணம் ஏதும் இல்லை.
நடிகா் தனுஷின் அரசியல் வருகைக்கு பின்னால் பாஜக இல்லை. யாருக்கு பின்னாலும் நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனித்து செயல்பட்டு வரும் மிகப்பெரிய கட்சி பாஜக என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

