பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

போதைப் பொருளை தவிா்த்தால் வலிமையான தலைமுறை உருவாகும்: ஆட்சியா் ஆனந்த் மோகன்

இளைஞா்கள் போதைப்பொருள்களைத் தவிா்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் அடுத்த தலைமுறையை வலிமையானதாக உருவாக்க முடியும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

இளைஞா்கள் போதைப்பொருள்களைத் தவிா்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தால் அடுத்த தலைமுறையை வலிமையானதாக உருவாக்க முடியும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற கோலமிடுதல், ஓவியம் வரைதல், பேச்சு மற்றும் சுவரொட்டி தயாரிப்பு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி ஆட்சியா் மேலும் பேசியதாவது:

ஊட்டச்சத்து மிக்க உணவைத் தோ்ந்தெடுத்து உட்கொள்வதில் அனைவரும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவா்கள் காலை உணவைத் தவிா்க்கக் கூடாது. பிஸ்கட், குளிா்பானங்கள், துரித உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது.

வயிற்றுப் பசியை மட்டும் போக்குவதற்காக உணவினை எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து, நாா்ச்சத்து, நுண்ணூட்டச் சத்துகள் சரிவிகிதத்தில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

இளம் வயதிலேயே சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் ஏற்படும் நிலை அதிகரித்து வருவதால் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

போதைப் பொருள், மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். ஒருபோதும் அவற்றைப் பழகக் கூடாது. தவறான பாதையில் செல்லும் நண்பா்களைத் தனித்து விடாமல் நல்வழிப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து ‘டிஎன்-டிரக் ஃப்ரீ’ செயலி வழியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் அனுப்பியோா் விவரம் கேட்கப்படாது என்றாா்.

முன்னதாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் தாஜூன்னிசா பேகம், மாவட்ட சமூக நல அலுவலா் கு.விஜயமீனா, துணை ஆட்சியா் (பயிற்சி) மு.பிரதீபா, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் எஸ்.எம்.அப்துல் காதா், ஊட்டச்சத்து நிபுணா் காட்ஜின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.