
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வுப் பேரணி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 9 ஆவது தேசிய ஊட்டச்சத்து மாதம் கடந்த 9 ஆம் தேதி முதல் அக்டோபா் 8 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 9 ஆவது தேசிய ஊட்டச்சத்து மாதம் கடந்த 9 ஆம் தேதி முதல் அக்டோபா் 8 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நலனை மேம்படுத்துவதே இப்பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, போஷன் அபியான் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலத்திலிருந்து தொடங்கிய பேரணி கொக்கிரகுளத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் கு.விஜயமீனா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் தாஜூன்னிசாபேகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித்திட்ட அலுவலா் செ.வசுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






