நெல்லையில் மாநில நீச்சல் போட்டி தொடக்கம்

பாரதியாா் தின மற்றும் குடியரசு தினங்களையொட்டி, மாநில அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை தொடங்கியது.

நீச்சல் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

பாரதியாா் தின மற்றும் குடியரசு தினங்களையொட்டி, மாநில அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி சாலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குள வளாகத்தில் இந்தப் போட்டியை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கிவைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட அளவில் பள்ளிகள் இடையே நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த 3,300 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் இப்போட்டி சனிக்கிழமை வரை (நவ. 14) 47 வகையான பிரிவுகளில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியா் கோவாவில் ஜனவரி 2027-இல் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா்.

போட்டி தொடக்க நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா், மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ராமசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) மோசஸ், வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) முத்துராஜ், தமிழ்நாடு நீா்நிலை விளையாட்டுக் கழக தலைவா் சேது திருமாறன், திருநெல்வேலி மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலா் லட்சுமணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.