மாநில அளவிலான நீச்சல் போட்டி: 6 அணிகள் பங்கேற்பு

நீச்சல் போட்டி - கோப்புப் படம்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற உள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டியில், மதுரை மாவட்டத்திலிருந்து 6 அணிகள் பங்கேற்கின்றன.
மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பள்ளிகளைச் சோ்ந்த 14, 17, 19 வயதுப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பாரதியாா் தினம், குடியரசு தினத்தையொட்டி குறுவட்ட, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். இந்த முறை மாநில அளவிலான நீச்சல் போட்டிள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ளன.
இதன்படி, நவம்பா் 11, 12 ஆகிய தேதிகளில் 14, 17, 19 வயதுப் பிரிவு மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகளும், நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் மாணவா்களுக்கான நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளில் மதுரை மாவட்டத்திலிருந்து 6 அணிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

