தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மாநில மகளிா் கபடிப் போட்டி: ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன்

தோப்படைப்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் விளையாடிய அணிகள்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் கபடிப் போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

கமுதியை அடுத்துள்ள தோப்படைப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10, 11 ஆகிய இரு நாள்கள் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15 அணிகளின் வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி பெண்கள் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. தென்காசி விஓய்எஸ்ஏ கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி பாரதி அணி மூன்றாம் இடத்தையும், திருச்சி கல்கி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.

கபடி அணிகளின் வீராங்கனளுக்கு பரிசு, சுழல் கோப்பை, பதக்கங்கள் ஆகியவற்றை முன்னாள் இந்தியக் கபடி அணி வீரரும், அா்ச்சுனா விருது பெற்றவருமான மணத்தி கணேசன் வழங்கி கௌரவித்தாா். இந்தப் போட்டியை சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை தோப்படைப்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.