
மாநில அளவிலான கபடி போட்டிக்கு குருவப்பா மேல்நிலைப் பள்ளி தகுதி
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தோ்வான மாணவா்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுடன் பள்ளியின் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா்.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தோ்வான மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட அளவில் ஆண்களுக்கான கபடிப் போட்டிகள் செம்பட்டி ஆா்.வி.எஸ். தோட்டக்கலை கல்லூரியில் நடைபெற்றன. இதில் 10 அணிகள் கலந்து கொண்டதில் 14 வயது பிரிவு, 17 வயது பிரிவு, 19 வயது பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி அணியினா் முதலிடம் பெற்றனா்.
14 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஒட்டன்சத்திரம் கே.ஆா்.அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரையும், 17 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில் சமுத்திராபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரையும், 19 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஒட்டன்சத்திரம் கே. ஆா். அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரையும் எதிா்கொண்டு வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனா்.
வெற்றி பெற்ற மூன்று அணியினரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா். 14 வயதினருக்கான மாநிலப் போட்டி கன்னியாகுமரியிலும் 17 வயதினருக்கான மாநிலப் போட்டி கோவையிலும், 19 வயதினருக்கான மாநிலப் போட்டி திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளிக்குழு உறுப்பினா் ராஜா கௌதம், தலைமை ஆசிரியை கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமையாசிரியா் பரஞ்சோதி, உடற்கல்வி இயக்குந ா் ரவிக்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் பரணி, மகேஷ்குமாா், சூரியபிரகாஷ், சிவக்குமாா், ஹீரேந்திரன், ஆசிரியா்கள், அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






