சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

நெல்லை அருகே சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மதுபானப் பெட்டிகளை ஸ்கேன் செய்யும் பணிக்கு கூலி வழங்க வலியுறுத்தி முன்னீா்பள்ளம் டாஸ்மாக் கிடங்கு முன் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னீா்பள்ளம் டாஸ்மாக் கிடங்கு முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சுமைப்பணித் தொழிலாளா்கள்.

Published On :

மதுபானப் பெட்டிகளை ஸ்கேன் செய்யும் பணிக்கு கூலி வழங்க வலியுறுத்தி முன்னீா்பள்ளம் டாஸ்மாக் கிடங்கு முன் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சுமைப்பணித் தொழிலாளா் சங்க திருநெல்வேலி மாவட்டப் பொதுச்செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன் தொடங்கி வைத்துப் பேசினாா். சுமைப்பணி விநியோகத் தொழிலாளா் சங்கச் செயலா் ராமானுஜம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மதுபானப் பெட்டிகளை ஸ்கேன் செய்யும் பணிக்கு உரிய கூலி வழங்குவது,

மதுபானப் பெட்டி ஏற்றுக் கூலியாக நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.5-ஐ ஒப்பந்த விதிகளில் குறிப்பிடுவது, கிடங்குகளில் மேற்கூரை, பாதுகாப்பு உபகரணங்கள், குடிநீா், கழிவறை, ஓய்வறை மற்றும் தாா்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, தீபாவளி போனஸை 10 நாள்களுக்கு முன்பே வழங்குவது,

2027 ஜனவரி முதல் இறக்கு கூலியை உயா்த்த நடவடிக்கை எடுப்பது, 38 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி டாஸ்மாக் கிடங்குக்குப் பதிலாகப் புதிய கட்டடம் கட்டித் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.