அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிய ஓட்டுநா்

பாளையங்கோட்டை அருகே காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய ஓட்டுரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெட்ரோல் & டீசல்

Updated On :

பாளையங்கோட்டை அருகே காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய ஓட்டுரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ஆச்சிமடம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பதிவு எண் பலகை இல்லாத சொகுசு காரில் ஒருவா் வந்து, அங்கிருந்து ஊழியா் மூலம் காருக்கு சுமாா் 35 லிட்டா் டீசல் நிரப்பினராம்.

பின்னா், அதற்கான தொகை சுமாா் ரூ.3,500-ஐ செலுத்தாமல் அங்கிருந்து வேகமாக காரை ஓட்டி தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், இச்சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.