'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது நயாரா!

பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் உயர்த்தியுள்ளது பற்றி...

Nayara Energy

கோப்புப் படம் - ENS

Published On :

மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மேற்காசியாவில் போர் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் கச்சா எண்ணெய் விலை அவ்வப்போது 100 டாலரைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.

இதையடுத்து இந்தியாவின் முன்னணி தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 -ம் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7,108 நயாரா பெட்ரோல் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை.

முன்னதாக நயாரா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பின்னர் ஜூன் மாதம் விலையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Nayara Energy raises petrol and diesel price all over india

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.