பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

டீசல் தொழில்துறையின் மீதான கட்டுப்பாட்டை இழந்த ரஷியா: டிரம்ப்

டீசல் தொழில்துறையின் மீதான கட்டுப்பாட்டை ரஷியா இழந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தது குறித்து...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்

Published On :

டீசல் தொழில்துறையின் மீதான கட்டுப்பாட்டை ரஷியா இழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப் 24 அன்று தொடங்கிய போர் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இதில் ஆரம்ப காலத்தில் ரஷிய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய உக்ரைன், அண்மைக்காலமாக தீவிர பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை (செப். 19) ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் மாஸ்கோவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி உதவி செய்து வருகிறது. மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தனது முயற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் படிவிட்டுள்ளதாவது:

துரதிர்ஷ்டவசமாக, டீசல் தொழில்துறையின் மீதான தனது கட்டுப்பாட்டை உக்ரைனுடனான போரின் காரணமாக ரஷியா இழந்துள்ளது.

ரஷியாவுக்குச் சொந்தமான ஏராளமான டீசல் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்கி, செயலிழக்கச் செய்துள்ளது. உக்ரைனுடனான இந்த முடிவில்லாத போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்தப் போரால் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு மாதமும் 25,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். என்னவொரு அவமானம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஆற்றல் முகமையின் தரவுகளின்படி, உக்ரைனின் தீவிரமான டிரோன் தாக்குதல்களால் ரஷியாவின் டீசல் உற்பத்தி சுமார் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

US President Donald Trump has stated that Russia has lost control over the diesel industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.