
விலை உயர்வை பரிசீலிக்கும் மஹிந்திரா & மஹிந்திரா!
மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி-ரக வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா
புதுதில்லி: மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி-ரக வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தது. இது குறித்த முடிவு அடுத்த சில வாரங்களில் எடுக்கப்படும் என்று மஹிந்திரா குழுமத்தின் வாகனப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரியான நளினிகாந்த் கொல்லகுண்டா தெரிவித்தார்.
மஹிந்திரா & மஹிந்திரா இந்த ஆண்டில் ஏற்கனவே மூன்று முறை விலையை உயர்த்தியுள்ளதாக கொல்லகுண்டா தெரிவித்திருந்தார். ஜனவரி, ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டன. ஜூலை மாத உயர்வானது சுமார் 2.7 சதவீதமாக இருந்தது.
நாங்கள் நிலைமையை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஏற்கனவே மூன்று முறை விலையை உயர்த்தியுள்ளோம். இருப்பினும், இது தொடர்ந்து மாறக்கூடிய சூழல் என்பதால், நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். அதே வேளையில், விலை உயர்வு தேவையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.
விலையை உயர்த்துவோமா அல்லது உயர்த்தமாட்டோமா என்று இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இது குறித்து நாங்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம் என்றார்.
Summary
Mahindra & Mahindra is weighing another price increase across its SUV portfolio.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





