மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வாகனங்களின் விலையை உயா்த்தும் ஹூண்டாய் இந்தியா!

தனது தயாரிப்பில் உள்ள அனைத்து வாகனங்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா இன்று அறிவித்தது.

Hyundai Motor India

Updated On :

புதுதில்லி: உற்பத்திச் செலவு அதிகரிப்பால் ஏற்படும் சுமையைக் ஓரளவு ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் 2026 முதல் ஹூண்டாய் தயாரிப்பில் உள்ள அனைத்து ரக வாகனங்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்தது.

வாகனத்தின் மாடல் மற்றும் வகையைப் பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும் என்றது ஹூண்டாய் இந்தியா.

உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு அவசியமாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையில், வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தைக் குறைக்க, செலவுகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்த செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொண்டு சமாளிக்கவும் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்தது.

உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு அவசியமாகியுள்ளதாக தெரிவித்தது.

ஹூண்டாய் இந்தியா, ரூ. 5.6 லட்சம் முதல் ரூ. 55.7 லட்சம் வரையிலான விலையில், 'கிராண்ட் i10 நியோஸ்' ஆகிய ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்கள் முதல் 'அயோனிக் 5' உள்ளிட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.