சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்! திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மசோதா இன்று தாக்கல்!மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!
/

யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 32.5% உயர்வு!

யெஸ் வங்கி அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.54 சதவீதம் அதிகரித்து ரூ. 1,071.80 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது.

News image
Updated On :19 ஜூலை 2026, 8:11 pm IST

மும்பை: தனியார் வங்கியான யெஸ் வங்கி, ஜூன் வரை முடிய முதலாம் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.54 சதவீதம் அதிகரித்து ரூ. 1,071.80 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. வங்கியின் முக்கிய நிகர வட்டி வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியே இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்ததாக வங்கி தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ. 808.65 கோடியாக இருந்தது. இருப்பினும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், வங்கியின் நிகர லாபம் 0.96 சதவீதம் சரிந்துள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டு ரூ. 2,371 கோடியிலிருந்து 17.5 சதவீதம் அதிகரித்து ரூ. 2,786 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டின் 2.5 சதவீதத்திலிருந்து ஜூன் காலாண்டில் இது 2.70 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில், வங்கியின் மொத்த வைப்புத்தொகை கடந்த ஆண்டு ரூ. 2.76 லட்சம் கோடியிலிருந்து 14.3 சதவீதம் அதிகரித்து ரூ. 3.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Summary

YES Bank reported a 32.54 per cent rise in consolidated net profit in June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.