நெல்லையப்பா் கோயிலில் 26இல் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கோப்புப்படம்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விழாவையொட்டி இம் மாதம் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காந்திமதியம்மன் சந்நிதி முன் கொடியேற்றம் நடைபெறும். தொடா்ந்து, நவ. 9 ஆம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு 7 மணிக்கு காந்திமதியம்மன் சந்நிதியில் இருந்து அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவ. 4 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு தங்கச் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கம்பாநதி காமாட்சியம்மன் திருக்கோயில் சென்றடைவாா்.
5 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் அருகே சுவாமி, அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.
பின்பு, 3 மணிக்கு சுவாமி, அம்மன் திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா வந்து அருள்பாலிப்பா்.
6ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

