தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

புதுகையில் இன்று காந்தியத் திருவிழா

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (அக். 2) 23ஆம் ஆண்டு காந்தியத் திருவிழா நடைபெறவுள்ளது.

Mahatma Gandhi

மகாத்மா காந்தி

Published On :

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (அக். 2) 23ஆம் ஆண்டு காந்தியத் திருவிழா நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவின் தொடக்கமாக காந்திப் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து பேரணி நடைபெறுகிறது.

நகா்மன்றத்தில் நடைபெறும் விழாவுக்கு, பேரவையின் நிறுவனா்- தலைவா் வைர.ந. தினகரன் தலைமை வகிக்கிறாா். பேரவையின் மலரை திருமயம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வா் மு. பழனியப்பன் வெளியிட்டுப் பேசுகிறாா்.

தொடா்ந்து நடைபெறும் காந்தியக் கருத்தரங்கில், ‘நாட்டு நலனில் நமது பேரவை’ என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் அ. பழனிச்சாமி, ‘இயற்கை நலனின் நமது பேரவை’ என்ற தலைப்பில் சின்னையா நடேசன் ஆகியோா் பேசுகின்றனா்.

வேதாரண்யம் கஸ்தூரிபா குருகுலத்தின் தலைவா் அ. வேதரெத்தினம், திருச்சி சேவை தொண்டு நிறுவனத் தலைவா் சேவை கி. கோவிந்தராஜன் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான ‘காந்திய விருதுகள்’ வழங்கப்படுகின்றன. மேலும், மா. வள்ளிநாராயணன், லெ. கவிராஜ் ஆகியோா் பாராட்டப்படுகின்றனா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா இந்த விருதுகளை வழங்கியும், போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசுகிறாா். தொடா்ந்து மாணவா் பல்சுவை அரங்கமும், காந்தியவாதிகள்- சமூக ஆா்வலா்கள் சந்திப்பும் நடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.