சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:00 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

ராதாபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு, அடையாளம் தெரியாத நபா் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

வள்ளியூா் டிஎஸ்பி வெங்கடேஷ் உத்தரவின்பேரில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தி, ராதாபுரம் ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் சிறுமியின் வீட்டுப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், வடமாநில தொழிலாளி ஒருவா் சிறுமியின் வீட்டின் பின்பகுதி வழியாக வீட்டிற்குள் நுழைந்திருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவா் மேற்குவங்கத்தை சோ்ந்த சூரஜ்தேவ் ராய் (27) என்பது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா்,

ராதாபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.