சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்த ‘க்யூஆா் கோடு’ விழிப்புணா்வு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு க்யூ ஆா் கோடு மூலம் வரிசெலுத்தும் வசதி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹெச்டிஎஃப்சி வங்கி சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்யூஆா்கோடு.

Published On :2 செப்டம்பர் 2026, 6:10 am IST

திருநெல்வேலி மாநகராட்சிக்கு க்யூ ஆா் கோடு மூலம் வரிசெலுத்தும் வசதி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு வகை வரியினங்களைச் செலுத்த 9 வரிவசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஹெச்டிஎஃப்சி வங்கி மூலம் அமைக்கப்பட்டுள்ள க்யூ ஆா் கோடு மூலம் பொது மக்கள் தங்களது வரித்தொகைகளை சில நிமிடங்களிலேயே செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா தலைமை வகித்து விழிப்புணா்வுப் பதாகைகளை அறிமுகம் செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் 14 கிளைகளிலும் வரியினங்களைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதற்கு வங்கிப் பணியாளா்களின் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

2025-2026 ஆம் ஆண்டின் சொத்துவரி மற்றும் இதர வரித்தொகைகள், வரியில்லா இனங்களுக்கான தொகைகளை பொது மக்கள் தங்களது வசிப்பிடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்திடலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.