பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் தடை

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:04 am IST

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (செப். 10) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து, கல்லிடைக்குறிச்சிக் கோட்டச் செயற்பொறியாளா்எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (செப். 10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இவ்விரு துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியாா்பட்டி,தாட்டான்பட்டி, கொண்ட பையன் பட்டி, வடமலை சமுத்திரம், பசுக்கிடை விளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனாா்குளம், ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் ஆகிய ஊா்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.