ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நெல்லை அருகே காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை இரவு காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை இரவு காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அஸ்வின் (21). இவா், பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கருங்குளத்தை சோ்ந்த கணேசன் (22), செய்துங்கநல்லூா் சிவா (23), கோபி (22) ஆகியோா் பணியாற்றினா்.

இவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை இரவு கடையில் வேலையை முடித்துவிட்டு காரில் செய்துங்கநல்லூருக்கு சென்று கொண்டிருந்தனராம். காரை அஸ்வின் ஓட்டியுள்ளாா்.

திருநெல்வேலி- திருச்செந்தூா் பிரதான சாலையில் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் பகுதியில் காா் சென்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிவா உயிரிழந்தாா். மற்ற 3 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.