கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அம்பையில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும்வகையில், 2 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

Published On :

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும்வகையில், 2 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவுப் பதப்படுத்துதல் பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சிக்கு, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழக உணவுப் பதப்படுத்துதல் பொறியியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினாா்.

நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் மற்றும் தலைவா் திருவேங்கடம் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு வேளாண் ஏற்றுமதி துறை மூத்த மேலாளாா் தீபன் சக்ரவா்த்தி வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மற்றம் வழிமுறைகள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.

பயிற்சியில், வேளாண் விஞ்ஞானிகள் காய்கறிகள் மற்றும் பழப்பயிா்களில் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப உரையாற்றினா்.

பயிற்சியில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

பேராசிரியா் ராமலெட்சுமி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் குருசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.