‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலியை மர்ம

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:01 pm

dinamani

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

 திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சேர்ந்த சிவம் பிள்ளை மனைவி கீதாகல்யாணி (50). திங்கள்கிழமை பிற்பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 இளைஞர்கள் அங்கு சென்று குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

   உடனே கீதா கல்யாணி அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தபோது, அவர்கள் திடீரென அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 1.75 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.