காயல்பட்டினத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள மேலப்பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
காயல்பட்டினம், சீதக்காதி நகரில் உள்ள மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் எனும் மேலப்பள்ளிவாசல், கீழக்கரை தொழிலதிபர் ஸலாஹுத்தீன், நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஆகியோரின் முயற்சியில் புதுப்பிக்கப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற விழாவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ பங்கேற்று பள்ளிவாசலைத் திறந்துவைத்தார்.
புதுப்பள்ளி மற்றும் மேலப்பள்ளியின் தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமை வகித்தார். நகரப் பிரமுகர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ மற்றும் புதுப்பள்ளி, மேலப்பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கீழக்கரையைச் சேர்ந்த ஏ.ஏம்.ஸாலிஹ் சேட் பாக்கவீ கிராஅத் ஓதினார். அபுல்ஹஸன் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எம்.முஹம்மத் ராஃபிக், எம்.எஸ்.ஸதக்கத்து ல்லாஹ், ஜெ.ஏ.லரீஃப் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர். பொருளாளர் அமீர் அப்துல்லாஹ், மஹான் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலிய்யுல்லாஹ் புகழ்பாடல் பாடினார். ஆன்மிக இதழின் ஆசிரியர் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பள்ளி ஜமாஅத் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெ.ஏ.லரீஃப் நன்றி கூறினார்.புதுப்பள்ளியில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?

மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!

இன்றைய செய்திகள் - நேரலை!

உபா சட்டத்தில் கைதானவருக்கு ஜாமீன்! உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்காததை விமர்சித்த உச்ச நீதிமன்றம்!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
