விளாத்திகுளத்தில் நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா

இசைமேதை ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 52ஆவது ஆண்டு இசை ஆராதனை விழா மற்றும் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

இசைமேதை ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 52ஆவது ஆண்டு இசை ஆராதனை விழா மற்றும் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் புதுச்சேரி பா. செயப்பிரகாசம், எட்டயபுரம் இளசைமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லப்பசுவாமிகள் கலை இலக்கிய இசை மன்றப் பொறுப்பாளர் இளையராஜா மாரியப்பன் வரவேற்றார்.
விழாவில், நல்லப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இசை அஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து விழா மேடையில் நல்லப்பசுவாமி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், நல்லப்பசுவாமிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் வெளியிட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக அவைத்தலைவர் மு. சங்கரவேலு பெற்றுக்கொண்டார். நல்லப்பசுவாமிகளின் ஆவணப்படத்தை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெளியிட, மதுரை தியாகராஜர் கல்லூரியின் முதன்மை இசை ஆய்வாளர் நா. மம்மது, வேம்பு தொண்டு நிறுவன இயக்குநர் பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூல் தொகுப்பு ஆசிரியர் என்.ஏ.எஸ். சிவகுமார், ஆவணப்பட இயக்குநர் சி. மகேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல் வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய துரை, நல்லப்பசுவாமிகளின் வழித்தோன்றல் பி. பால்ராஜா, கலைமாமணி கைலாசமூர்த்தி, கலைவளர்மணி இசக்கியப்பன், கவிஞர் மா. மேனன், நல்லப்ப சுவாமிகள் இசைக்குழு பொறுப்பாளர் பி. சென்னையன், எட்டயபுரம் பரமானந்தம், பேராசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நல்லப்பசுவாமிகள் இசைக்குழுத் தலைவர் துரை அரசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com