கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா

கி.ராஜநாராயணனின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சாரிபில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கி.ராஜநாராயணனின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சாரிபில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பூங்கா சாலை தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கிளைத் தலைவர் அபிராமி முருகன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் பொ. வேலுச்சாமி வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் நோக்கவுரையாற்றினார்.  தொடர்ந்து, எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய முன்னொரு காலத்தில் என்ற தலைப்பிலான நூலை சங்கத்தின் மாநிலச் செயலர் சு. வெங்கடேசன் வெளியிட, அதன் முதல் பிரதியை கிளைத் தலைவர் அபிராமிமுருகன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய இடைசெவல் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,  கி.ரா. ஒரு பல்கலைக்கழகம் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் கி.ரா.வின் படைப்புகளில் மண்ணும், மனிதர்களும் என்ற தலைப்பிலும் பேசினர்.
தொடர்ந்து, மதரா இயக்கிய கதவு குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், கி.ரா.வும், நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் பூமணி, வண்ணதாசன், சோ.தர்மன், கோணங்கி, வித்யாஷங்கர், மாரீஸ், சாரதி, பொன்னுராஜ், நாறும்பூநாதன், உதயசங்கர், ஜா.மாதவராஜ், பால்வண்ணம், தேவப்பிரகாஷ், பாலு, திடவை பொன்னுச்சாமி, முருகபூபதி, எஸ்.காமராஜ், சுவடி ஆகியோர் பேசினர். மு. மதியழகன் கி.ரா.வின் கதை என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் ஆனந்தன் வாழ்த்தினார். மாநிலச் செயலர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் வேரும், விழுதுகளும் என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய முன்னத்தி ஏர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்க மாநிலத் துணைச் செயலர் அ. லட்சுமிகாந்தன் தொகுத்து வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ராமசுப்பு நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள்சாமி, கோபால்சாமி, அய்யலுசாமி, பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com