திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் 6ஆவது வார்டு பகுதி புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீசந்தன விநாயகர், ஸ்ரீ சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இரவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







