சங்கீதவித்வான் கழுகுமலை கந்தசாமி (86), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை காலமானார்.
திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடத்தி வந்த பாலமுருகன் பாய்ஸ் கம்பெனியில் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர், சுமார் 9 ஆண்டுகள் நாடகத் துறையில் பணியாற்றிய பின்னர், சங்கீதவித்வான் சங்கரதாஸிடமும், சங்கீதவித்வான் டாக்டர் சீதாராமையாவிடமும் முறையாக சில காலம் சங்கீதம் பயின்றவர். பின்னர் மதுரை சோமுவிடம் 12 ஆண்டுகள் சங்கீதம் பயின்றார். பழனி திருவாவினன்குடியில் 1967இல் முதல் அரங்கேற்றம் நடைபெற்றது. அகில இந்திய வானொலியிலும் பாடி வந்தார். 1968 முதல் தமிழிசை சங்கத்தின் இசை வாழ்வில் கச்சேரி செய்து வந்தார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டம் அளித்து கெளரவம் செய்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறம் உள்ள சிவன் கோயில் மேலரதவீதியில் சில ஆண்டுகளாக வசித்து வந்த இவர், வியாழக்கிழமை (ஜூன் 28) இரவு 9.15 மணிக்கு காலமானார். அவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 29) கோவில்பட்டியில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.