கோவில்பட்டி ஸ்ரீ ஸத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி சார்பில் சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு விசேஷ பூஜையும், 9 மணி முதல் சிறப்பு பஜனை, அபிஷேகம், சுமங்கலி பூஜை, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 6 மணிக்கு அமிர்த வர்ஷினி குழுவினரின் வீணை கச்சேரி மற்றும் பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு கான்பூர் மகாதேவனின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் 1008 வடைமாலை சாத்தி ஆஞ்சநேயர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

